"மனைவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை" - இளைஞரை கட்டி வைத்து சரமாரியாக உதைத்த கணவர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈசன்தங்கு பகுதியை சேர்ந்த ராம்பிரபு என்பவர் துணிக்கடை நடத்தி வரும் ஒரு பெண்ணுக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈசன்தங்கு பகுதியை
சேர்ந்த ராம்பிரபு என்பவர் துணிக்கடை நடத்தி வரும் ஒரு பெண்ணுக்கு
செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவலறிந்த அப்பெண்ணின் கணவர் சுப்பிரமணியன், வேறொரு பெண் மூலம் செல்போனில் பேசி ராம்பிரபுவை துணிக் கடைக்கு வரவழைத்து விசாரித்து உள்ளார். பின்னர் சுப்பிரமணியன் நண்பர்கள் உதவியோடு ராம்பிரபுவை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்.
Next Story