108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு : சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்த செல்வராஜன் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாயை வழக்கு செலவாக 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதற்கு தடை விதிக்க கோரி செல்வராஜன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏற்கனவே இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story