மருத்துவ மேற்படிப்பு விளக்க குறிப்பேட்டுக்கு எதிரான வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

அரசின் புதிய நிபந்தனைகளால் மருத்துவ மேற்படிப்புக்கு தகுதி இருந்தும் சேர முடியாமல் இருப்பவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்பு விளக்க குறிப்பேட்டுக்கு எதிரான வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
x
அரசின் புதிய நிபந்தனைகளால் மருத்துவ மேற்படிப்புக்கு தகுதி இருந்தும் சேர முடியாமல் இருப்பவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்புக்கு 40 லட்சம் ரூபாயும், மருத்துவ பட்டய படிப்பிற்கு 20 லட்சம் ரூபாயும் செலுத்திடவும், அதற்காக இரு அரசு அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாத பத்திரம் சமர்ப்பிக்கவும் வேண்டும் என தமிழக அரசு வெளியிட்ட மருத்துவ மேற்படிப்பு விளக்க குறிப்பேட்டில்,  கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சரவண‌ன் தொடர்ந்த பொது நலன் வழக்கில், அரசு அதிகாரிகளிடம் உத்தரவாதம் பெறுவது இயலாத‌ காரியம் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ மேற்படிப்புக்கு தகுதி இருந்தும், இந்த நிபந்தனையால் படிப்பில் சேரமுடியாதவர்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு  அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்