அரசுப்பள்ளியில் குறைந்த மாணவர் சேர்க்கை விகிதம் : சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்
கரூர் அருகே செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில், சேர்க்கை விகிதம் குறைந்ததை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின், தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் கிறிஸ்டின் ராஜா, தமக்கு சொந்தமான தனியார் பள்ளியில், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களை சேர்த்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனால், அரசுப்பள்ளியில், 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே பயின்று வருவதாக கூறி, இதனை கண்டித்து, மாணவர்கள் பஞ்சப்பட்டி - லாலாப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல் குறித்து தகவலறிந்த, கல்வித்துறை அதிகாரிகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story