"நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தேர்வை தாமதமின்றி உடனே ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நீட் தேர்வு சமூக நீதியை சிதைக்கும் கொடூர ஆயுதமாக உள்ளது என்பதை நடப்பாண்டு நடந்து முடிந்த நீட் தேர்வு நிரூபித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாணவ, மாணவியருக்கு மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோருக்கும் நீட் தேர்வு கடும் மன அழுத்தம் தருவதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்தாலும், எத்தனை பேருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றும் ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் போது தான் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் நீங்கும் என்றும், எனவே நீட் தேர்வை தாமதமின்றி ரத்து செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்