ஜன்னலை உடைத்து நுழைய முயற்சிக்கும் கும்பல் - மக்கள் பீதி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பாரதியார் தெருவில் வசித்து வருபவர் கிருபாராஜ் சுரேஷ்
ஜன்னலை உடைத்து நுழைய முயற்சிக்கும் கும்பல் - மக்கள் பீதி
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பாரதியார் தெருவில் வசித்து வருபவர் கிருபாராஜ் சுரேஷ். தனியார் பள்ளி தாளாளரான   இவர் வீட்டில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நள்ளிரவில் ஜன்னல் கம்பி மற்றும் கதவுகளை உடைத்து உள்ளே முயன்றுள்ளனது. சப்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மின் விளக்கு போட்டதை அடுத்து, அங்கிருந்து தப்பிய அந்த கும்பல் அருகில் பாலாஜி என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து அரை கிலோ வெள்ளி பொருட்கள்,செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. இதோடு நிற்காமல், ஜோகிந்தர் என்பவரின் வீட்டிற்குள்ளும் நுழைந்த அந்த கும்பல், அங்கு சி.சி.டிவி கேமரா பொறுத்தி உள்ளதை கண்டு அதை உடைக்க முயன்று, பின்னர் சுற்றிலும் கேமரா உள்ளதை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை முயற்சி அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கும்பலின் அட்டகாசம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்