டாஸ்மாக் விற்பனையாளரை பணி செய்ய அனுமதிக்க கையூட்டு : ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது

விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூர் டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சரவணன், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பூச்சி மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
டாஸ்மாக் விற்பனையாளரை பணி செய்ய அனுமதிக்க கையூட்டு : ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது
x
விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூர் டாஸ்மாக்  கடையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சரவணன், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பூச்சி மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் குண்டலபுலியூர் டாஸ்மாக்  கடைக்கு இடம் மாறுதல் பெற்று,  விற்பனையாளராக பணியில் சேர வந்த  மணிகண்டனிடம் மூவாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக,  மணிகண்டன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் அறிவுரையின் பேரில், சரவணனிடம் மணிகண்டன் ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதனை சரவணன் வாங்கிய போது, அவரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்