ரயிலில் ஏறவிடாமல் வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக புகார்

சேலம் டவுன் ரயில் நிலையத்தில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தால் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.
ரயிலில்  ஏறவிடாமல் வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக புகார்
x
சேலம் டவுன் ரயில் நிலையத்தில் பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் பிற்பகல் வந்த போது, கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் பயணிகள் முண்டியடித்து ஏறியுள்ளனர். அவர்களை,  ஒரு சில பெட்டிகளில்  படிக்கட்டில் அமர்ந்து  இருந்த இளைஞர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயணிகளுக்கும் படிக்கட்டில் அமர்ந்து இருந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. ரயிலில் ஏற முடியாததால் பாதிக்கப்பட்ட பயணிகள்,  டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப தருமாறு பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் உள்ள அலுவலர்களிடம் நடந்ததை சொல்லி கோரியுள்ளனர். பயணச்சீட்டை திரும்பப் பெற்று பணம் தர இயலாது என, ரயில்வே ஊழியர் தெரிவித்த நிலையில், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த  ரயில்வே அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்து , பயணச்சீட்டை ரத்து செய்து பணத்தை திருப்பி அளித்துள்ளனர். இதனை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் சென்றனர். இதனால் சேலம் டவுன் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்