மேல்மருவத்தூர் கோவிலில் ஆய்வு - இணை ஆணையர் தனபால் பணியிட மாற்றம்

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை ஆய்வு செய்ய உத்தரவிட்ட இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் தனபால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
x
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டார். இதற்காக காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயிலுக்கு ஆய்வு செய்ய சென்ற போது, அங்கிருந்த ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆய்வு செய்ய வந்த ஊழியர்களை கோயிலை விட்டு வெளியேற்றியதை தொடர்ந்து 
அந்த குழுவில் இருந்த ரமணி, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்நிலையில் ஆதிபராசக்தி கோயிலை ஆய்வு செய்ய உத்தரவிட்ட அதிகாரி தனபாலை பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை, சிவகங்கை இணை ஆணையராக மாற்றி இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலவன், வேலூர் இணை ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்