நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை எதிரொலி : பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் நேற்றிரவு முதல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் நேற்றிரவு முதல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 559 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை ஆயிரத்து 177 கனஅடியாக அதிகரித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 54 புள்ளி 33 அடியாகவும், நீர் இருப்பு 5 புள்ளி 5 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி நீரூம் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக பாசன விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Next Story