பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக மோசடி
நெல்லை பாளையங்கோட்டை அன்பு நகரை சேர்ந்தவர் பாஸ்கர கண்ணன். இவர் ஆன்லைன் மூலமாக பங்குசந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை அன்பு நகரை சேர்ந்தவர் பாஸ்கர கண்ணன். இவர் ஆன்லைன் மூலமாக பங்குசந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களிடம் பங்கு சந்தையில் 3.32 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அதிக வட்டி பெற்றுத்தருவதாக ஆசைவார்தை கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் முதலீடு தொகை பெற்றதாக தெரிகிறது. சொன்னபடி, முதல் 2 மாதங்களுக்கு வட்டி பணம் கொடுத்த பாஸ்கர கண்ணன் பின்னர், தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரவேண்டும் என மனு அளித்தனர். அவரகள் அனைவரிடமும் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் வரை பாஸ்கர கண்ணன் மோசடி செய்து உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
Next Story