"தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை" - அமைச்சர் வேலுமணி
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமையில்
ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க 400 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். உள்ளாட்சி தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் , அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
Next Story