"வேதாந்தாவுக்கு வழங்கியதால் ஹைட்ரோ கார்பன் தவறு இல்லை" - கே.எஸ்.அழகிரி கருத்து
வேதாந்தா குழுமத்திற்கு கொடுத்திருப்பதால் மட்டுமே ஹைட்ரோ கார்பன் திட்டம் தவறு என சொல்ல முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார்.
வேதாந்தா குழுமத்திற்கு கொடுத்திருப்பதால் மட்டுமே ஹைட்ரோ கார்பன் திட்டம் தவறு என சொல்ல முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனிமனிதனால் இவ்வளவு பெரிய திட்டங்களை செய்ய முடியாது என்றும் குழுமங்களால் மட்டுமே செய்ய முடியும் என்று தெரிவித்தார். மேலும், அது தவறு என்றால் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டுமே தவிர, அதை விடுத்து அரசியல் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
Next Story