முதலமைச்சர் சென்ற விமானம் தாமதமாக புறப்பட்டது

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிகிச்சைக்காக கொல்கத்தாவை சேர்ந்த மானிக் கர்லால் என்பவர் பயணித்தார்.
முதலமைச்சர் சென்ற விமானம் தாமதமாக புறப்பட்டது
x
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிகிச்சைக்காக கொல்கத்தாவை சேர்ந்த மானிக் கர்லால் என்பவர் பயணித்தார். விமானம் சென்னை வான் எல்லைக்குள் வந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து மானிக் கர்லால் உடலை போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த இந்த விமானத்தில் தான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை செல்வதாக திட்டமிடப்பட்டது. இதற்கிடையே, விமானத்தில் பயணி இறந்து விட்டதால் விமானத்தை சுத்தம் செய்யும் பணி காரணமாக, முதலமைச்சர் செல்ல வேண்டிய விமானம் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Next Story

மேலும் செய்திகள்