நீலகிரி மாவட்டத்தில் 6 அரசுப்பள்ளிகள் மூடல் : அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஏற்பாடு

நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 6 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ள சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 6 அரசுப்பள்ளிகள் மூடல் : அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஏற்பாடு
x
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 3 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 6 அரசுப் பள்ளிகள் நீலகிரி மாவட்டத்தில் மூடப்பட்டுள்ளது.  3 ஆரம்ப பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி, 2 உயர்நிலைப்பள்ளி என 6 பள்ளிகளை மூடிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களை அதிகாரிகள் மாற்றி உள்ளனர். மாணவர்கள் குறைவாக உள்ள மேலும் ஆயிரத்து 200 பள்ளிகளை மூட அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்