"கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்று தருவார்கள் என நம்புகிறேன்" - திமுக கூட்டணி எம்.பி.களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

கர்நாடகாவிடம் பேசி, காவிரி நீ​ரை திமுக கூட்டணி எம்பிக்கள் பெற்று தர வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
x
கர்நாடகாவிடம் பேசி, காவிரி நீ​ரை திமுக கூட்டணி எம்பிக்கள் பெற்று தர வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவில் பிரசாரம் செய்தபோது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும் என ராகுல் காந்தி பேசியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். 

வாக்கு விகிதம் சரிவு ஏன்? : முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

செயல்படுத்த முடியாத திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி திமுக கூட்டணியினர் வாக்குகளை பெற்ற முதலமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிட்டு கொடுத்து விட்டு, மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டதால் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், அவர் விளக்கம் அளித்துள்ளார். 

மும்மொழி கொள்கையை ஆதரிப்பதாக எப்போது கூறினேன்?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழர்களின் குழந்தைகள் தமிழ் மொழியை படிக்க விரும்பியதால், பிரதமரிடம் டுவிட்டர் வழியாக கோரிக்கை விடுத்த‌தாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் திரித்து கூறியதால் பதிவை நீக்கியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்