நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்வது தவறான செயல் - கார்வண்ண பிரபு
நீட் தேர்வு தோல்வியால், தற்கொலை செய்து கொள்வது என்பது தவறான செயல் என நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ள மாணவர் கார்வண்ண பிரபு கூறியுள்ளார்.
நீட் தேர்வு தோல்வியால், தற்கொலை செய்து கொள்வது என்பது தவறான செயல் என நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ள மாணவர் கார்வண்ண பிரபு கூறியுள்ளார். கரூரை சேர்ந்த மருத்துவர் கண்ணன் மற்றும் கவுசல்யா தம்பதியின் மகன் கார்வண்ண பிரபு, நீர் தேர்வில், 572 மதிப்பெண்களுடன் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் முதல் இடத்தையும் இந்திய அளவில் 5 ஆம் இடத்தையும் பிடித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், சரியான கண்ணோட்டத்துடன் நீட் தேர்வை கையாண்டால், எளிதாக தேர்ச்சி பெற முடியும் என கூறியுள்ளார்.
Next Story