கருணாநிதி வெண்கல சிலை வடிவமைக்கும் பணியை ஆய்வு செய்தார் ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் கருணாநிதி வெண்கல சிலை வடிவமைக்கும் பணியை ஆய்வு செய்தார் ஸ்டாலின்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் உள்ள சிற்பி தீனதயாளன் பட்டறையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. களிமண்ணாலான முதல் கட்ட சிலை மாதிரி பணிகள் முடிந்ததை அடுத்து, ஸ்டாலின் கடந்த மாதம் அதனை பார்வையிட்டு சென்றார். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸ் அச்சில் கருணாநிதி கம்பீரமாக உட்கார்ந்து எழுதுகோலை பிடித்து எழுதும் நிலையிலான சிலை வடிவமைக்கும் பணிகளை சிற்பி தீனதயாளன் செய்து வருகிறார். இதனை திமுக தலைவர் ஸ்டாலின், முரசொலி செல்வம், ஆ.ராசா ஆகியோருடன் சென்று பார்வையிட்டார். அப்போது ஸ்டாலின் சில திருத்தங்களை கூறினார். உடனடியாக அந்த சிலையில் சிற்பி திருத்தங்களை மேற்கொண்ட உடன், தன்னுடைய செல்போனில் அதனை ஸ்டாலின் படம் பிடித்தார். ஆகஸ்ட் 7ஆம் தேதி கலைஞரின் நினைவு தினத்தில் முரசொலி அலுவலகத்தில் 5.25 அடி உயரத்தில் கலைஞர் சிலை நிறுவப்பட உள்ளது.
Next Story