முழுமை பெறாத வேளச்சேரி பெருங்குடி ரயில்நிலைய உள்வட்ட சாலை... அதிகரிக்கும் விபத்துகள்

வேளச்சேரி பெருங்குடி ரயில் நிலைய உள்வட்ட சாலை பணிகள் முழுமை பெறாமல் இருப்பதால் விபத்துகள் அதிகரிப்பதோடு வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
x
சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள தரமணி, ஓஎம்ஆர் சாலையை இணைப்பதற்காக வேளச்சேரியில் இருந்து பெருங்குடி ரயில் நிலையம் வழியாக உள்வட்ட பாதை ஒன்று உருவாக்கப்பட்டது. வேளச்சேரி பிரதான சாலை போக்குவரத்து நெரிசலாக காணப்படுவதால் பெருங்குடி எம்ஜிஆர் சாலை வழியாக வேளச்சேரி நோக்கி செல்லும் ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையானது ஒரு ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள நிலையில் கல்குட்டை வாய்க்காலில் பாலம் கட்டப்படாததால் பணிகள் முழுமை பெறாத நிலையில் உள்ளது. மழைக் காலங்களிலும் இரவு நேரங்களிலும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 60 அடி அகலம் கொண்ட இந்த இணைப்பு சாலையானது 30 அடி மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த சாலை பகுதி மாறி வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. சாலையின் அகலத்தை அதிகரிப்பதோடு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்