காயிதே மில்லத் 124 - வது பிறந்த நாள் விழா : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மரியாதை
காயிதே மில்லத்தின் 124 -ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி மூத்த தலைவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
காயிதே மில்லத்தின் 124 -ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி மூத்த தலைவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஸ்டாலின், நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய போது காயிதே மில்லத், மத்தியில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்கு குரல் கொடுத்ததாக நினைவு கூர்ந்தார். இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும், தற்போது அதற்கான அறிவிப்பை வெளியிட்டு, பின்னர் அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளதாக தெரிவித்த ஸ்டாலின், மத்திய அரசு அலுவலகங்களில், தமிழ் மொழியை கட்டாயம் ஆக்க வேண்டுமென இந்த நாளில் உறுதி ஏற்பதாக கூறினார்.
Next Story