கோவையில் விபத்தை ஏற்படுத்தி உதவுவது போல் நடித்து நகை கொள்ளை
கோவையில் விபத்தை ஏற்படுத்தி உதவுவது போல் நடித்து 845 கிராம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கடை வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் ராமமூர்த்தி என்பவர், நகை கடையிலிருந்து 845 கிராம் தங்க நகையை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தாராபுரம் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் இவரை பின் தொடர்ந்த வந்த இருவர், ராமமூர்த்தி சென்ற வாகனம் மீது மோதி அவரை நிலைகுலைய வைத்துள்ளனர். பின்னர் அவருக்கு உதவுவது போல் நடித்து அவரிடம் இருந்த 845 கிராம் நகை பையினை எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காட்டூர் போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story