குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

குறுவை தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
குறுவை தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், மேட்டூர் அணையில் குறைந்தது 90 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தால் மட்டும் தான் குறுவைக்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும். ஆனால், மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் குறுவை சாகுபடி  செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதற்கு தமிழக அரசின் குறுவை தொகுப்புத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை செயல்படுத்த அரசு முன் வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்