தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை தொடங்குகிறது : முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு இன்று ஆய்வு

8 மாதங்களுக்கு பின்னர், மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழுவினர் இன்று முல்லைபெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை தொடங்குகிறது : முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு இன்று ஆய்வு
x
தேனி மாவட்டம் உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, 2014 மே 7 ஆம் தேதி  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் மூவர் குழுவை அமைத்தது. தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். இந்த குழுவில் தமிழக அரசு பிரதிநிதியாக பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் பிரபாகரன், கேரள பிரதிநிதியாக, அம்மாநில நீர்வள ஆதார அமைப்பின் செயலர் விஷ்வாமேக்தா ஆகியோர் உள்ளனர். 8 மாதங்களுக்கு பின்னர் இக்குழு இன்று அணையை ஆய்வு உள்ள நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 112 அடியாக உள்ளது. மழைக் காலங்களில் அணையில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , அணை பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை குறித்தும் மூவர் குழு ஆய்வு செய்ய உள்ளது.  பிரதான மற்றும் பேபி அணை, கேலாரி மற்றும் மதகு பகுதியில் அணையின் நீர் கசிவு உள்ளிட்டவற்றையும்  ஆய்வு செய்த பின்னர்,  மாலை 4 மணிக்கு குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்தில் ஆய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்