முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு

முன்விரோதம் காரணமாக சங்கரன்கோவிலில் பட்டபகலில் முன்னாள் ஊராட்சி தலைவர் அரிவாளால் வெட்டபட்ட சம்பவம் பரப்பரப்பை எற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு
x
சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு அச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் போஸ்.மூன்று மாதத்திற்கு முன்பு போஸிற்கும்,மடத்துபட்டியை சேர்ந்த குமார் என்பருக்கும் ஏற்பட்ட தகராறில் போஸ், குமாரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சங்கரன்கோவில் மெயின் பஜார் ரோட்டில் போஸ் சென்று கொண்டிருந்த போது  குமார் அவரை அரிவாளால் வெட்டி தப்பி சென்று விட்டார்.இதில் படுகாயமடைந்த போஸை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.சம்பவம் குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்