"டாஸ்மாக் கடையை இடம் மாற்றக்கூடாது" - மதுபிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
டாஸ்மாக் கடையை இடம் மாற்றக் கூடாது என்று மது பிரியர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நூதன சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.
டாஸ்மாக் கடையை இடம் மாற்றக் கூடாது என்று மது பிரியர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நூதன சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம், ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் திரண்டு வந்து ஒரு மனுவை கொடுத்தனர். அதில், ஈரோடு பூந்துறையை அடுத்த ராட்டைசுற்றி பாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சிலர் புகார் மனு அளித்து வருவதாகவும், அந்த இடத்தில் இருந்து டாஸ்மாக் மதுக் கடையை அகற்றினால் மது அருந்துவதற்காக 10 முதல் 15 கிலோ மீட்டர் வரை பயணம் செல்ல நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களால் மது அருந்துவதற்காக அலைய முடியாது என்பதால் டாஸ்மாக் கடையை மாற்றக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story