பொறியியல் சேர்க்கை - ரேண்டம் எண் வெளியீடு....
பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைகான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு, தொழில்நுட்ப இயக்குநரகம் மேற்கொள்ளும் நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் ஒதுக்கீடு சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில், நடைபெற்றது. உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டு ரேண்டம் எண் ஒதுக்கீட்டை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விண்ணப்பித்த மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார். ரேண்டம் எண்ணை, இணையதளத்தில் பார்க்கலாம் எனவும் மொபைல் எண்களுக்கும் அனுப்பப்படும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் கூறினார்.
இதையடுத்து, மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு , ஜூன் 7 முதல் 12 வரை தமிழகம் முழுவதும் 42 மையங்களில் நடைபெறும் எனவும் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், ஜூன் 17ந் தேதி வெளியிடப்படும் எனவும் ஜூன் 20ம் தேதி முதல் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story