நெல்லையில் தொடரும் கொள்ளை சம்பவங்கள் : பொதுமக்கள் பீதி
ல்லையில் அடுத்தடுத்து 5 வீடுகளில் கதவை உடைத்து, 50 சவரன் நகை மற்றும் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நெல்லை கே.டி.சி. நகரை அடுத்த பிரண்ட்ஸ் காலனியை சேர்ந்தவர் செந்தில் மகராஜன் வீட்டின் பூட்டை உடைத்து, 34 கிராம் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த செந்தில், இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கொள்ளை நடந்த வீட்டுக்கு அருகே இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அடுத்தடுத்து பூட்டப்பட்டு இருந்த பரமசிவன், மாரியப்பன் , கேசவராஜ் ஆகியோரது வீடுகளிலும் இருந்து நான்கு முதல் 5 சவரன் வரை நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. எனவே, 5 வீடுகளிலும் மொத்தம் 50 சவரன் தங்க நகை கொள்ளை போயிருக்கலாம் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்று பூட்டிய வீடுகளில் தொடரும் கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Next Story