அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரிக்கை : அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறும் அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அமைச்சர் வேலுமணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் ஒப்பந்த நிறுவனங்களும் வழக்குகள் தொடர்ந்தன. அவற்றை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Next Story