குன்னூர் பழக்கண்காட்சி : தரம் பிரித்து ஜாம், ஜெல்லி தயாரிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சியில் பயன்படுத்திய பழங்களை கொண்டு ஜாம், ஜெல்லி தயாரிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சியில் பயன்படுத்திய பழங்களை கொண்டு ஜாம், ஜெல்லி தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தோட்டக்கலை துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் வண்டி, மேடை, மயில், பட்டாம்பூச்சி போன்றவை பழங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. அரங்குகளில், வாழை பழங்கள், மாம்பழங்கள், பலா, மற்றும் பேரி, பிளம்ஸ் உள்ளிட்ட பழங்கள் இடம் பெற்றிருந்தன. டிராகன் பழம், பப்ளிமாஸ், நாவல் உள்ளிட்ட பல்வேறு வகை பழங்கள் ஒன்றரை டன் அளவுக்கு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அவற்றை மீண்டும் பயன்படுத்த இந்த ஆண்டு முதன்முறையாக முடிவு செய்யப்பட்டது. அந்த பழங்களை பழவியல் நிலையத்திற்கு கொண்டு சென்று, ஜெல்லி, ஜாம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படு வருகிறது.
Next Story