அமமுக பிரமுகர் சரவணன் கொலை வழக்கு : 3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

மானாமதுரையில் அமமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அமமுக பிரமுகர் சரவணன் கொலை வழக்கு : 3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை
x
மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மேற்கு ஒன்றியச் செயலாளர் சரவணன், கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், பரமக்குடி மணிநகரைச் சேர்ந்த மணி ஐயப்பன், மானாமதுரை வேலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார், திருப்புவனம் புதூரைச் சேர்ந்த பாலா என்ற பாலாஜி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ், முத்துச்செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்