14 வயது சிறுமியை காதலித்து அழைத்து சென்ற இளைஞர் - போக்சோ சட்டத்தில் கைது
சென்னை அடுத்த அம்பத்தூரில் 14 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாக போக்சோ சட்டத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அடுத்த அம்பத்தூரில் 14 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாக போக்சோ சட்டத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அம்பத்தூர், ஆசிரியர் காலனியை சேர்ந்த 14 வயது சிறுமி, கடந்த 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அந்த சிறுமியை திருமண ஆசை காட்டி விழுப்புரம் மாவட்டம் பெரியமணிஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்ற 23 வயது இளைஞர் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தனிப்படை அமைத்து தேடுவதை அறிந்து அந்த சிறுமியை அழைத்துகொண்டு சுரேஷ் அம்பத்தூர் வந்தபோது, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 14 வயது சிறுமிக்கு தாலி கட்டி பாலியல் உறவு வைத்துக்கொண்டதால் சுரேசை கைது செய்த போலீசார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story