மும்மொழி கொள்கையை கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் உள்ள இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல்வீச வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
* இந்தி உள்ளடக்கிய மும்மொழித் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்ற கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைக்கு திமுக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டையும், தமிழ் மொழியை சிறுமைப்படுத்தி ஒதுக்கவும், மொழி  வாரியான மாநிலங்களின் தேசிய உணர்வுகளில் வெந்நீர் ஊற்றும் விதமாக நாட்டை பிளவுபடுத்தும் பரிந்துரையை இந்த குழு அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் மொழி உணர்வு தமிழர்களின் ரத்தத்தில் இரண்டறக் கலந்தது.

*  அந்த ரத்தத்தில் "இந்தி" என்பதை  யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை திமுக ஒரு போதும் சகித்துக் கொள்ளாது  என்றும் தெரிவித்துள்ளார். 

* தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல் வீசி தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்ற பாஜகவின் கனவு அவர்களுக்கே பேரிடரை ஏற்படுத்தி விடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழித்திட்டம் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கும் திரு கஸ்தூரி ரங்கன்  கமிட்டியின் பரிந்துரையை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்