திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை
திருபுவனத்தில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
திருபுவனத்தில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். மதமாற்றத்தை தடுத்ததால் ராமலிங்கம் கொலை நடைபெற்றது என இந்து அமைப்புகள் கூறியதைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் ஏழு நாட்கள் தங்கள் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் தஞ்சாவூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருபுவனம் ராமலிங்கம் வீடு உள்ள தூண்டில் விநாயகம் பேட்டை பகுதி மற்றும் சம்பவம் நடைபெற்ற முஸ்லீம் தெரு என தேசிய புலனாய்வு பிரிவு அமைப்பினர் விசாரனை நடத்தி சென்றனர்.
Next Story