நாமக்கல் : பலத்த காற்று-வாழை,பாக்கு மரங்கள் வேருடன் சாய்ந்தன
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன . மேலும் 100 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 50 வருடங்களாக பாதுகாத்து வந்த பாக்கு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது எனவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேத மதிப்பீட்டை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story