சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை : கணக்கில் வராத ரூ.71 ஆயிரம் சிக்கியது
நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 71 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் இருந்த உணவு பாத்திரத்தில் மல்லிகைப் பூவிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 71 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக சார் பதிவாளர் ஈஸ்வரன் உட்பட ஏழு ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story