பெட்டி கடைக்குள் கருக்கலைப்பு மையம்...10 ஆண்டுகளில் 3,000 சிசுக்கள் அழிப்பு

திருவண்ணாமலையில், பெட்டி கடைக்குள் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
x
திருவண்ணாமலையில், பெட்டி கடைக்குள் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர். அங்குள்ள லாடாவரம் பகுதியை சேர்ந்த சுமதி, 4-வது முறையாக உருவான கருவை கலைத்துள்ளார். இந்த தகவல் காவல்துறைக்கு தெரியவந்ததை அடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதில், திருவண்ணாமலை கிரிவலைப்பாதையில் பெட்டிக்கடைக்குள் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் நடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல்துறையை அங்கு  வரவழைத்தார். கருக்கலைப்பு மருந்துகள், உபகரணங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், கடையை இழுத்து மூடி சீல் வைத்தனர். கவிதா-பிரபு தம்பதியிடம் விசாரணை நடத்தியதில், கடந்த 10 ஆண்டுகள் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்ததும், இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசுக்களை அழித்ததும் தெரியவந்துள்ளது. அந்த தம்பதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கந்தசாமி உறுதி அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்