ஆரணி : 2 மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை - மக்கள் போராட்டம்

ஆரணி அருகே 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
ஆரணி : 2 மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை - மக்கள் போராட்டம்
x
ஆரணி அருகே 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுக்கபட்டு ஊராட்சிக்குபட்ட எம்.ஜி.ஆர் நகரில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்