காவிரியில் 19.5 டி.எம்.சி. நீரைப் பெற நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 19 புள்ளி 5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
காவிரியில் 19.5 டி.எம்.சி. நீரைப் பெற நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
x
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 19 புள்ளி 5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கர்நாடகா நீர்ப் பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி, கர்நாடக மாநிலம் வழக்கம்போல் அணைகளில் தண்ணீர் இல்லை என்று திரும்பத் திரும்ப பொய் கூறி வருவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முடியாத சூழல் நிலவுவதால், குறுவை சாகுபடிப் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19 புள்ளி 5 டி.எம்.சி. நீரைப் பெற, தமிழக அரசு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்