12ம் வகுப்பு பாடத்தில் நெல் ஜெயராமன் சாதனை

தமிழகத்தின் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து விவசாயிகளுக்கு வழங்கிய சாதனை விவசாயி நெல் ஜெயராமன் பற்றி 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
x
தமிழகத்தின் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து விவசாயிகளுக்கு வழங்கிய சாதனை விவசாயி நெல் ஜெயராமன் பற்றி 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள அதிரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெல் ஜெயராமன். ஆண்டுதோறும் தன்னுடைய சொந்த ஊரில் பாரம்பரிய நெல் திருவிழாவினை நடத்தி, பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் பெயர் பெற்றார். திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு பாரம்பரிய நெல் ரகங்களையும் வழங்கி வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட 12ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில்,  தாவரவியல் பாடபுத்தகத்தில் நெல் ஜெயராமன் குறித்த பாடத்தை வைத்து அவருக்கு தமிழக அரசு கவுரம் சேர்த்துள்ளது. "நமது நெல்லை பாதுகாப்போம்" என்ற இயக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய நெல் ஜெயராமன், 2011ஆம் ஆண்டு இயற்கை விவசாயத்திற்கான மாநில அரசின் விருதையும், சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்பதற்கான தேசிய விருதை 2015ஆம் ஆண்டிலும்  பெற்றார் என்றும், பிலிப்பைன்ஸ் அரசின் கௌரவத்தை பெற்றவர் என்றும் பாடப்புத்தகத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிக்குள்ளான நெல் ஜெயராமன், கடந்த ஆண்டு இறுதியில் காலமானார்.

Next Story

மேலும் செய்திகள்