ரவுடியின் மகனை வெட்டி கொலை செய்த வழக்கு - காவல் நிலையத்தில் நான்கு பேர் சரண்

சென்னை,புதுவண்ணாரப்பேட்டையில், தினேஷ் என்ற இளைஞரை கொலை செய்த வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
ரவுடியின் மகனை வெட்டி கொலை செய்த வழக்கு - காவல் நிலையத்தில் நான்கு பேர் சரண்
x
சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில், தினேஷ் என்ற இளைஞரை கொலை செய்த வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். யார் ரவுடி என்கிற போட்டியில் கொலை நடந்ததாக தெரிய வந்துள்ளது. சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தினேஷ் என்கிற இளைஞரை, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சராமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிய நிலையில், நான்குபேர் சரணடைந்துள்ளனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், யார் ரவுடி என்கிற போட்டி காரணமாக கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. 

வ.உ.சி நகர் பகுதியில் ரவுடியாக வலம் வந்த பிரகாஷ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். அவருக்கு பின்னர் அவரின் மகன் தினேஷ் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த  மாங்கா சதீஷ், செல்வா, சுந்தர், ஹரி ஆகிய நால்வருக்கும் தினேஷுக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தினேசை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்