காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - குடிநீர் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

கும்பகோணத்தில் ஒருமாதமாக தண்ணீர் வழங்கவில்லை என குற்றம்சாட்டி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - குடிநீர் வழங்கவில்லை என குற்றச்சாட்டு
x
கும்பகோணத்தில் ஒருமாதமாக தண்ணீர் வழங்கவில்லை என குற்றம்சாட்டி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் நகராட்சியில் கடந்த ஒருமாதமாக சரியாக குடிநீர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத‌தால், அப்பகுதி பெண்கள் கும்பகோணம் - திருவையாறு சாலையில் காலிக் குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்துவந்த போலீசார், உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த‌தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்