பாபநாசம் அணையில் செத்து மிதக்கும் மீன்கள் : அரசு துரித நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்
நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நீர் ஆதரமாக விளங்கும் பாபநாசம் அணையின் நீர் மட்டம் 10 அடிக்குக் கீழ் குறைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன.
நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நீர் ஆதரமாக விளங்கும் பாபநாசம் அணையின் நீர் மட்டம் 10 அடிக்குக் கீழ் குறைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன. அணையிலிருந்து மக்களிள் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படும் சிறிதளவு நீரும் துர்நாற்றத்துடனும், சகதியுடனும் விநியோகிக்கப்படுவதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாக திமுக எம்.பி. கனிமொழி சமூக வலதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக அரசும், அதிகாரிகளும் துரித நடவடிக்கை மேற்கொண்டு இறந்த மீன்களை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், அணையைத் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Next Story