பூ மூட்டைகள் மீது நீரை ஊற்றி வீண்டிப்பதாக புகார் - அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் திருச்சியில் பூ மூட்டைகள் மீது பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஊற்றி வீண்டிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டிய காவிரி- கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே, 25க்கும் மேற்பட்ட இடங்களில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து தனியார் நிறுவனங்கள் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றன. கோடையில், ஆறுகளில் தண்ணீர்வரத்து இல்லாத நிலையில் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியிலிருந்து வெளியூருக்கு விற்பனைக்காக வாகனங்களில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்படும் பூக்கள் வாடாமலிருக்க அவற்றின் மீது பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஊற்றி வீண்டிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 125 ரூபாய்க்கு 14 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விற்கப்பட்டு பூ மூட்டைகள் மீது ஊற்றப்படுதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதைத் தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story