அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்...
விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் 4 அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் நான்கு பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. தேர்வு காலங்களில் அலுவலக உதவியாளர்களாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் துணையுடன் இந்த முறைகேடு நடந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து சேலம், மதுரை உள்பட 5 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிகப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் குமார் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story