மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுமா? - காவிரி டெல்டா பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை துறை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேட்டூர் அணையின் மூலம் டெல்டா பகுதி உட்பட 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறப்பது வழக்கமாக இருந்தாலும், கடந்த 8 ஆண்டுகளாக அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு காலதாமதமாக திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜூன்12 ஆம் தேதியில் அணை திறக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சாகுபடி பணிகளைத் தொடங்க விவசாயிகள் காவிரி நீரை எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 47 அடியாக குறைந்துள்ளதால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முடியாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Next Story