மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணி தீவிரம்
மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் உயிர்க்கோளக் காப்பகமாக மன்னார் வளைகுடா விளங்குகிறது.இந்நிலையில், இங்குள்ள நான்கு தீவுகளில் மட்டும் வனத்துறையினர் மிதவைகள் அமைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாரம்பரிய மீனவர்கள், மிதவை அமைக்கும் பணியை வனத்துறையினர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story