"வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது சவால்" - சத்யபிரத சாகு
'வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால்' என, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
'வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால்' என, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 'பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத் தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பது தான் தாம் கண்ட உண்மை' எனக் கூறினார். பணப் பட்டுவாடாவை தடுப்பது ஒரு சவால் தான் என்றும், சமுதாயத்தை ஒருவர் மட்டுமே திருத்தி விட முடியாது என்றும், சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சினைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வு காணவேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்.
Next Story