குன்னூர் - ரண்ணிமேடு சிறப்பு மலை ரயில் : 5 நாட்களுக்கான ரயில் சேவை துவங்கியது

நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக வனப்பகுதியை கண்டு ரசிக்கும் வகையில், சிறப்பு மலை ரயில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரையிலான இயக்கம் துவங்கியது.
குன்னூர் - ரண்ணிமேடு சிறப்பு மலை ரயில் : 5 நாட்களுக்கான ரயில் சேவை துவங்கியது
x
சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க மலை ரயிலில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, கண்ணாடி மேற்கூரை கொண்ட சிறப்பு மலை ரயில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை 5 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு மலை ரயிலில், முதல் வகுப்பிற்கு 450 ரூபாயும், இரண்டாம் வகுப்பிற்கு 320 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதி வழியே மலை ரயிலில் இயற்கை காட்சிகளை ரசித்தவாறு செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணம் மேற்கொண்டனர். இதில், நூற்றாண்டு பாரம்பரிய மலை ரயிலின் சிறப்பு அம்சங்கள் மற்றும் மலை ரயில் உருவான விதம் குறித்து எடுத்து சுற்றுலா பயணிகளுக்கு கூறப்பட்டது. இது சிறப்பு ரயில் சேவை சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்