பாபநாசம் அணையில் தண்ணீர் வற்றியதால் செத்து மிதக்கும் மீன்கள்
பாபநாசம் அணையில் தண்ணீர் வற்றிய நிலையில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகிறது.
பாபநாசம் அணையில் தண்ணீர் வற்றிய நிலையில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகிறது. 4 மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் கடும் வறட்சியால் தண்ணீர் 9 அடிக்கு கீழே சென்றது. இதனால் மீன்கள் செத்து மிதந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் வற்றிவிட்டதால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story