திண்டுக்கல் : காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை போராட்டம்

திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை காலனியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
திண்டுக்கல் : காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை போராட்டம்
x
திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை காலனியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மக்கள், காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஆட்சியரிடம் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்த பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்